தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

310

 

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது. தமிழினமே நீ எழிச்சிக்கும் புரட்சிக்கும் தலைதுாக்கவிலை எனில் நவின உலகு உன்னை தடம் இல்லாது அழித்துவிடும்!  – ஈழத்து நிலவன் –

download

ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான அமெரிக்கத் தீர்மானம், தமிழர் தரப்புக்குள் ஒரு தெளிவற்ற நிலையைத் தோற்றவித்துள்ளது

கூட்டமைப்பில் உள்ள ஏனைய பங்காளிக் கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் சிவில் சமூகமும், இந்த தீர்மானம் குறித்து நீதிக்கான ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளன
போரின் போது தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே தீர்வு கிட்டும் என்றே தமிழர் தரப்பு முழுமையாக நம்புகிறது. அதற்காகவே, சர்வதேச விசாரணைப் பொறிமுறை அமைய வேண்டும் என்ற கருத்தை, தமிழர் தரப்பு எல்லாத் தளங்களிலும் வலியுறுத்தி வந்தது.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையும் சரி, ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையிலும் சரி, கலப்பு நீதிமன்றத்தை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது.

ஜெனிவாவில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் போது, இலங்கை, இந்தியா, சீனா, ரஷ்யா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொடுத்த அழுத்தங்களினால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்த தீர்மான வரைவு மேலும் நலிந்து போனது.

சர்வதேச என்ற பதம் முற்றுமுழுதாக நீக்கப்பட்டது. கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குத் தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது. கலப்பு விசாரணை என்று அடையாளப்படுத்தும் வகையிலான பகுதிகள் தீர்மான வரைவில் இருந்து நீக்கப்பட்டன.

சர்வதேச சமூகம், தமது கண்காணிப்பு மற்றும் பங்களிப்புடன் கூடிய விசாரணைகளே நடக்கும் என்கிறது.
இலங்கை அரசாங்கமோ யாருடைய தலையீடும் இல்லாத தமது சொந்த விசாரணைகளே நடக்கப் போகிறது என்கிறது.
சர்வதேச சுதந்திர விசாரணையில் இருந்து இலங்கையை தவிர்த்தல் என்பது தமிழர்கள் மீதான நிறுவனமயமாக்கப்பட்ட இனப்படுகொலையை வலுப்படுத்தவே செய்துள்ளது.

ஜெனிவா தீர்மானத்துக்கு அமைய உருவாக்கப்படும், விசாரணைப் பொறிமுறை எத்தகையது- அது எவ்வாறு செயற்படவுள்ளது- அதில் வெளிநாட்டு நீதிபதிகள் நிபுணர்களின் பங்களிப்பு எவ்வாறானதாக இருக்கும் என்ற கேள்விகள் தமிழ் மக்களிடையே எழுந்திருக்கின்றன.

கடந்த கால அனுபவங்கள் தமிழ் மக்களுக்கு மோசமானதாகவே இருந்திருக்கின்றன. இலங்கையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்களும் விசாரணைக் குழுக்களும் நியாயமானதாக செயற்பட்டிருக்கவில்லை. அவை மக்களின் நம்பிக்கையீனத்தையே சம்பாதித்திருக்கின்றன. இதன் காரணமாகவே உள்நாட்டு விசாரணைகளை தமிழ் மக்கள் அடியோடு எதிர்க்கின்றனர்- வெறுக்கின்றனர். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரிமாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கருத்துச் சுதந்திரம் கொழும்பிலாவது ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது ஆனால் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சித்திரவதைகள், இராணுவ புலனாய்வு சேவையின் கண்காணிப்பு மற்றும் தலையீடுகள் இடம்பெற்றுவருகிறது.

இலங்கை சுதந்திரம் அடைத்த நாள் முதல் சிங்கள அரசின் ஏமாத்து துரோக அரசியலாலேயே முன்நேடுக்கப்படுகிறது. இலங்கையின் இன்றய அதிபர் மைதிரிபாலா சிரிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையினால் நல்லிணக்க ஆணையத்தின் தலைவராக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் அதிபர் சந்திரிகா ஆகிய அனைவரும் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை கொடும் குற்றங்களை செய்தவர்கள்.

இலங்கையின் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணையானது, ஒரு கலப்பு நீதிமன்றம் மூலம்தான் இடம்பெற வேண்டுமென்று ஹ_சைன் பரிந்துரைத்த போது, தமிழரசு கட்சி அதுதான் சரியானது அதனைத்தான் நாங்களும் வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டது. பின்னர் அந்த யோசனையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்த போது தமிழரசு கட்சி அது தொடர்பில் மௌனம் சாதித்தது.

இந்த விடயங்களை தொகுத்து நோக்கினால், இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் மக்களின் சார்பில் செயற்படுகின்றதா அல்லது ரணில் விக்கிரமசிங்க மற்றும் மைத்திரிபால கூட்டிலான தேசிய அரசாங்கத்திற்கு சேவகம் செய்கின்றதா என்னும் கேள்வி ஒரு சமான்ய தமிழ் குடிமகனுக்குள் ஏற்படுவது இயல்பே.

இனப்படுகொலை தொடர்பிலும் வலுவாக பேசிவரும் வடக்கு முதலமைச்சர், நீதியசரர் விக்கினேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்பின் எந்தவொரு கட்சியும் விவாதிக்கவில்லை மாறாக தமிழரசு கட்சி மட்டுமே அவருக்கு எதிராக தங்களது கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முற்பட்டது.

தமிழரசு கட்சியின் செயற்பாடுகள் உண்மையிலேயே தமிழ் மக்களின் நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறதா அல்லது தமிழரசு கட்சியிலுள்ள ஒரு சிலரது நலன்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகிறதா ???

சிங்களத்தின் சதிவலை யில் சிக்கி தமிழினத்தின் பலத்தை பலவீனப்படுத்திய எதிர்க்கட்சி த்தலைவர் சம்பந்தர் திருகோணமலை மாவட்டத்திற்கு என்ன செய்தார். சிங்கள குடியேற்றத்திற்கு பங்காளியானார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றபோது உறுதுணையாக இருந்தார்.பிரதேசசபையை அமிர்தலிங்கத்தோடு சேர்ந்து ஏற்றுக் கொண்டார். அமிர்தலிங்கத்தின் இனத்ததுரோகம் தண்டிக்கபட்டது 1989ஆம் ஆண்டு யூலை மாதம் 13ஆம்நாள்.
இந்தியாவில் வாழ்ந்தார். இன்றுவரை சம்ந்தரின் குடும்பம் இந்தியாவின் பிச்சையில் வாழ்கிறது.அன்றிலிருந்து
சந்திரிக்காவின் ஆட்சியில் குண்டு துளைக்காத மகிழ்வுந்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தார்.இனத்துரோகியாக இருந்தும் விடுதலைப்புலிகள் மன்னித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் உள்வாங்கி மதிப்பளித்தார்கள்.இனப்படுகொலை 2009க்கு தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்கு முதன்மைப்படுத்தப்படுகிறது. 2009 இல் சம்பந்தர் இந்தியாவில்அமைதியாக இருந்தது. .தே.கூட்டமைப்பு சிறிசேனாவின் ஆட்சிமாற்ற்த்திற்கு அளித்த ஆதரவில் கடுகளவு கூட குரல் கொடுக்காமல் இருந்தது.தமிழர்களால் எந்த நிபந்னையும் இன்றி சிங்களத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தமிழன் உரிமை அரசியலை சம்பந்தன்சாக்கடையில் போட்டான்.
2015 சனவரி 8க்கு பிறகு சிங்களவன் ஐநாவின் விசாணையை முடக்க களமாடினான். தமிழனை பிச்சைக்காரனாக்கினான் இனத்துரோகி சம்பந்தன். ஐநா கூட்டத்தொடர் பங்குனியில் வந்தது சிங்களவன் ஆட்சி மாற்றம் அவகாசம் கேட்டடான் ஐநா அனுமதித்தது. தமிழனை அம்மனமாக்கிய ஒற்றை இனத்துரோகி. சம்பந்தருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியைக் கொடுத்து சிம்மமானத்தில் இருந்திக்கொண்டே ஐநா அறிக்கையை சுக்குநூறாக்கியது சிங்கள பேரினவாத அரசு . மட்டக்களப்பிலும் , யாழ்ப்பாணத்திலும் சினிமா கட் அவுட், பேனர், தோரணம், பட்டாசு என்று தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் குறைவைக்காமல் திரையரங்குகளில் வைக்கப்பட்ட கட் அவுட்களுக்கு பாலாபிஷேகமும் பீர் அபிஷேகமும் நடந்த. மறுபுறம் பாடசாளைச்சிறுமிகள் கடத்தல், பாலியல் வன்புணர் , கொலை , இன்னுமொரு புறம் மது , போதைப்பொருள் , குளுமோதல் , வாள் வெட்டு , சிங்கள கலைநிகழ்வுகள் திணிப்பு , சிங்கள மொழித்திணிப்பு, தமிழர்களிடம் இனப்படுகொலையை மறக்கச்செய்தல் ,

ஒரு பக்கத்தில் தமிழர் தாயகப்பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாலையும் கழுத்துமாக மாப்பிள்ளைக் கோலத்தில் வலம் வருகிறது.

பாதிக்கப்பட்ட தமிழர்கள் மீது பயங்கரவாதமாக நடந்து கொள்ளும் மிகக்கொடூரமான சிங்கள ராணுவம் இருக்கும் வரையில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடக்கும் என எவரும் எதிர்பார்க்க இயலாது.

தமிழ்த் தரப்புக்கள் எதிர்பார்த்த சர்வதேச விசாரணையொன்றுக்கான கதவுகள் பெரும்பாலும் சாத்தப்பட்டுள்ள நிலையில், சர்வதேச- சுயாதீன நீதிபதிகளின் தலையீட்டைக் கோருவதற்காக செயற்திட்டங்களை மிக வேகமாகவும், ஒருங்கிணைந்த ரீதியிலும் முன்னெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுள்ளது. அதற்கான முனைப்புக்கள் என்பது சர்வதேச சட்ட நியமங்களின் போக்கிலும், இராஜதந்திர ரீதியிலும் முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான், பாதிக்கப்பட்ட தரப்பான தமிழ் மக்களுக்கு கொஞ்சமாகவேனும் நீதியைப் பெற்றுத் தரும். இல்லையென்றால், எல்லாமும் சம்பதன் மற்றும் சுமந்திரனுக்கு போட்ட வாக்குப்போல் வீணாகப் போய்விடும்!

புத்தகம் படித்த புத்தியீவிகளை நம்பியிருக்கும்வரை தமிழனின் தோல்வி நிலையானது. விடுதலை அரசியலை விற்றவர்கள்; இப்போது சர்வதேசத்துடன் சேர்ந்து நீதியையும்
விற்கிறார்கள். “சிந்திக்க தவறியமை எமது குற்றம்”.
“மக்கள் புரட்சி” கனவு கண்ட தியாகதீபத்தின் “சிந்தனை புரட்சி” வெடிக்கட்டும். “தமிழர்களே சிந்தியுங்கள்!!!!” தமிழினமே நீ எழிச்சிக்கும் புரட்சிக்கும் தலைதுாக்கவிலை எனில் நவின உலகு உன்னை தடம் இல்லாது அழித்துவிடும்.

– ஈழத்து நிலவன் –

SHARE