இங்கிலாந்துக்கு அனுபவங்களை அள்ளி ஊட்டும் ஜெயவர்த்தனே: புகழ்ந்து தள்ளும் ஜோ ரூட்

321

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே துடுப்பாட்ட ஆலோசகாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபியில் தொடங்கியது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் சுழல் தாக்குதலை சமாளிக்க, ஜெயவர்த்தனேவை துடுப்பாட்ட ஆலோசகராக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நியமித்தது.

சுழற்பந்தை சிறப்பாக சமாளிக்கும் துடுப்பாட்ட வீரரான ஜெயவர்த்தனே டெஸ்ட் போட்டிகளில் 11,814 ஓட்டங்களை குவித்துள்ளார். தற்போது தனது அனுபவங்களை இங்கிலாந்து அணிக்கு வழங்கி வருகிறார்.

இது பற்றி ஜெயவர்த்தனே கூறுகையில், “நான் வித்தியாசமாக ஆலோசனைகளை வழங்க முயற்சிக்கிறேன். அதுமட்டுமல்லாது எனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறேன்.

இதற்கான வேலைகள் நடந்துக் கொண்டே இருக்கிறது. இதற்கான பலன் ஒரே இரவில் கிடைத்து விடாது.

உற்றுநோக்குதல், சிலவற்றை எளிதாக திட்டமிடல், கட்டுப்படுத்தக் கூடிய விடயங்களை கட்டுப்படுத்துதல் போன்றவை கற்றுக் கொள்வது வீரர்களுக்கு உதவியாக இருக்கும்” என்றார்.

சிறப்பாக ஆலோசனைகளை வழங்கி வரும் ஜெயவர்த்தனேவுக்கு இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்ததுடன், அவரின் வித்தியாசமான அணுகுமுறை தொடர்பில் வியப்பையும் தெரிவித்துள்ளார்.

SHARE