மியான்டடின் 22 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்

323

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார் யூனிஸ்கான்.

இங்கிலாந்துக்கு எதிராக இன்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை அவர் எட்டினார்.

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் அபுதாபியில் இன்று தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சை பாகிஸ்தான் அணி ஆடி வருகிறது.

இதில் 62வது ஓவரில் யூனிஸ்கான் சிக்சர் அடித்தார். அப்போது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த மியான்டட்டை முந்தினார்.

மியான்டட் 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8832 ஓட்டங்கள் குவித்துள்ளார். இந்த ஓட்டங்கள் தான் பாகிஸ்தான் டெஸ்ட் வரலாற்றில் ஒரு வீரர் அடித்த அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் யூனிஸ்கான் 22 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்டட் சாதனையை முறியடித்தார்.

ஒருநாள் போட்டியைப் பொருத்தவரை மியான்டட் 7381 ஓட்டங்களுடன் முன்னிலையில் இருக்கிறார். யூனிஸ்கான் 264 போட்டிகளில் விளையாடி 7240 ஓட்டங்கள் குவித்து 6வது இடத்தில் இருக்கிறார்.

SHARE