ராஜீவ் காந்தியின் முடிவே அவரைப் பலியெடுத்தது: உத்தரப் பிரதேச மாநில ஆளுனர்

296

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில ஆளுனர் ராம் நாயக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் இராணுவத் தளபதியும், இந்தியாவின் தற்போதைய உள்துறை அமைச்சருமான ஜெனரல் வி.கே.சிங் எழுதிய ‘Courage and Conviction.’ என்ற நூலின் ஹிந்தி ppsspp games list மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழா, லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், உரையாற்றிய உத்தரப் பிரதேச ஆளுனர் ராம் நாயக்,

இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு ராஜீவ்காந்தி எடுத்த முடிவினால் தான் அவர், தனது உயிரைத் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜெனரல் வீ.கே.சிங் தனது 42 அண்டு இராணுவ வாழ்வில், பாகிஸ்தானுடனான 1965ஆம் ஆண்டு போர், இலங்கைக்கு இந்திய அமைதிப்படை அனுப்பி வைக்கப்பட்டது, போன்ற சவாலான தருணங்களுக்கு முகம் கொடுத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

SHARE