சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறேன்! அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஷேவாக்

294

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷேவாக் தனது அதிரடியால் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத இடத்தை பிடித்தார்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை குவித்த ஷேவாக் கடந்த 2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் எந்தவொரு தொடரிலும் தெரிவு செய்யப்படவில்லை.

துபாயில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியின் தொடக்க விழாவில் ஷேவாக் பேசும் போது, “சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறாவிட்டால் மாஸ்டர்ஸ் சாம்பியன் போட்டியில் விளையாட முடியாது. எனவே இந்தியாவுக்கு சென்று தனது ஓய்வு தொடர்பாக அறிவிப்பேன்” என்று தெரிவித்திருந்தார்.

அதன் படி இந்தியா திரும்பிய ஷேவாக், தான் சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

ஷேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8,273 ஓட்டங்களையும், 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,586 ஓட்டங்களையும் எடுத்துள்ளார்.

மேலும், 19 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 4,048 ஓட்டங்கள் எடுத்துள்ளார் ஷேவாக்.

SHARE