டோனி 9/10 என்றால் நான் 2.5/10: விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா

291

டெஸ்ட் போட்டிகளில் மகேந்திரசிங் டோனியின் இடத்தை நிரப்புவது கடினம் என இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விக்கெட் கீப்பராக விருத்திமான் சஹா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், டோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன், அவரது சாதனைகளை பரிசீலிக்கும் போது டோனியின்நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம்.

இன்னும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் மட்டுமே எனக்கான இடத்தை பெற முடியும்.

டோனி சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, டெஸ்ட் போட்டிகளிலும் சாதனைகள் புரிந்துள்ளார்.

நான் 2 வாய்ப்புகளைப் பெற்ற காரணம் நான் 2 அரைசதங்களை அடித்திருந்ததே. நான் சரியாக ஆடவில்லை என்றால் எனக்கு பதில் வேறொருவர் நிச்சயம் வருவார்.

இருப்பினும் எனக்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

SHARE