விமர்சனங்களுக்கு வித்தியாசமாக பதிலடி: டுவிட்டரில் ஜடேஜா வெளியிட்ட புகைப்படம்

309

இந்திய அணியின் சகலதுறை வீரர் ஜடேஜா, தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு டுவிட்டரில் பதிலடியாக ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

மோசமான பார்மில் இருந்த ஜடேஜா, கடந்த 4 மாதங்களாக அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதற்கு அவர் ரஞ்சிக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டது காரணமாக அமைந்தது. 5 இன்னிங்சில் விளையாடிய ஜடேஜா 30 விக்கெட்டுகளையும், 3 இன்னிங்சில் விளையாடி 2 அரைசதமும் அடித்தார்.

இந்த நிலையில் தன்னை பற்றிய விமர்னத்திற்கு பதிலடியாக, அவர் 5 போட்டியில் பயன்படுத்திய பந்தில் அவரது இன்னிங்சிஸ் பற்றி எழுதி அதை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE