பெற்றெடுத்த தந்தையை குப்பைகளை சேகரித்து காப்பாற்றும் சிறுவன்

304

சீனாவில் குப்பைகளை சேகரித்து பெற்ற தந்தையை காப்பாற்றி வரும் சிறுவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் குயிஸ்ஹு மாகாணத்தைச் சேர்ந்த ஒவு டோங்மிங் என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் படுத்த படுக்கையாகிவிட்டார்.

இவரது மனைவியும் பிரிந்துசென்றுவிடவே, கவனித்துக்கொள்வதற்கும், சிகிச்சை செய்வதற்கு பணமில்லாமல் திண்டாடி வந்த ஒவுவை, அவர் பெற்றெடுத்த புதல்வன் காப்பாற்றி வருகிறார்.

13 வயதான யாகலின், காலை 6 மணிக்கெல்லாம் கண்விழித்து உணவுகளை தயார் செய்துவிடுகிறான், பின்னர் தனது தந்தைக்கு உணவினை ஊட்டிவிட்டு, தேவையான உதவிகளையும் செய்துகொடுத்துவிட்டு பள்ளிக்கு செல்கிறான்.

பின்னர் பள்ளியிலிருந்து வீடு திரும்பியதும், குப்பை சேகரிக்க செல்லும் யாகல், அதனை பணமாக மாற்றி தனது வீட்டுசெலவு மற்றும் தந்தையின் சிகிச்சைக்காக பயன்படுத்திக்கொள்கிறான்.

உலகத்தில் உள்ள அனைத்து மகன்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் யாகலின் செயலைப்பார்த்து, தற்கொலை செய்துகொள்ளவிருந்த ஓவு அந்த முடிவினையும் கைவிட்டுள்ளார்.

SHARE