அடுத்தடுத்து நிகழ்ந்த சாலை விபத்துக்கள்: 13 மணி நேரத்தில் 11 பேர் பலியான பரிதாபம்

311

கனடா நாட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர சாலை விபத்துக்களில் 13 மணி நேரத்தில் தொடர்ச்சியாக 11 பேர் பலியாகியுள்ள சம்பவம் பொலிசாரையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எட்மோண்டன் மாகாணத்தில் உள்ள அல்பேர்ட்டா நகர சாலைகளில் தான் இந்த கொடூர விபத்துக்கள் நிகழ்ந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 8 மணியளவில் Willingdon பகுதியில் கார் மற்றும் லொறி மோதிக்கொண்ட விபத்தில் காரை ஓட்டிவந்த 44 வயதான நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த சம்பவம் நிகழ்ந்து சில மணி நேரங்களுக்கு பிறகு, இதே பகுதியில் கார் ஒன்றில் 7 பேர் பயணம் செய்தபோது, கார் திடீரென சாலையில் உருண்டு சென்று விபத்துக்குள்ளாகியது.

இந்த சம்பவத்தில் அதில் பயணம் செய்த 4 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். உயிர் தப்பிய 3 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் Evansburg பகுதியில் இரண்டு சக்கர வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதை ஓட்டிய நபர் உயிரிழந்தார்.

சில நிமிடங்களுக்கு பிறகு, Peace River பகுதியில் கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

சனிக்கிழமை காலை 9 மணிக்கு பிறகு, Spruce Grove என்ற பகுதியில் 3 பேர் பயணம் செய்த வாடகை கார் ஒன்று கற்களை ஏற்றிச்சென்ற லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில், 3 நபர்களும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.

அல்பேர்ட்டா நகர பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்துக்கள் குறித்து பேசிய Leigh Drinkwater என்ற பொலிஸ் அதிகாரி, 12 மணி நேரங்களில் நிகழ்ந்த கொடூரமான விபத்துக்களில் 11 பேர் உயிரிழந்துள்ளது ஒப்பிட முடியாத ஒரு துயர சம்பவம் என குறிப்பிட்டுள்ளார்.

சாலையின் தரம் விபத்த்துக்களுக்கு காரணமாக இருக்க முடியாது என கூறிய அவர், மது அல்லது திடீர் தலை சுற்றல் காரணமாக இந்த விபத்துக்கள் நிகழ்ந்துள்ளனவா என விசாரணை நடத்தி வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE