தொண்டையில் உணவு சிக்கியதால் ஏற்பட்ட மூச்சு திணறல்: பரிதாபமாக பலியான 7 வயது மாணவி

304

அமெரிக்க பள்ளி ஒன்றில் மதிய உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி ஒருவருக்கு திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நியூயோர்க்கில் உள்ள ப்ரூக்ளின் நகரை சேர்ந்த பள்ளி ஒன்றில் Noelia Echavarria என்ற 7 வயது சிறுமி பயின்று வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று வீட்டிலிருந்து ’சாண்ட்விச்’ என்ற ரொட்டியை மதிய உணவிற்காக கொண்டு சென்றுள்ளார்.

பின்னர், மதிய உணவின்போது ஒரு அறையில் அமர்ந்து சாண்ட்விச்சை ஆசையாக சாப்பிட்டுள்ளார். அப்போது, திடீரென உணவு துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதனால், கடும் மூச்சு திணறலுக்கு உள்ளான அந்த மாணவி, துடி துடித்தவாறு அறையை விட்டு வெளியே ஓடியுள்ளார்.

இந்நிலையில், இந்த அவசர செய்தியை அறிந்து வந்த அவசர வாகன சேவையில் பணிபுரியும் உதவி மருத்துவர் ஒருவர் குழந்தைக்கு முதலுதவி அளித்து பின்னர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மருத்துவமனையில் மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ’சிறுமி ஏற்கனவே மூளைச்சாவு அடைந்துவிட்டதாக’ அதிர்ச்சி தகவல் அளித்துள்ளனர்.

3 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

SHARE