இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் விளையாட ஜாசன் ஹோல்டருக்கு தடை

321

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

இதில் கொழும்பில் கடந்த 1ம் திகதி நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 ஓவர்கள் தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த அணியின் தலைவர் ஜாசன் ஹோல்டருக்கு 40 சதவீதமும், மற்ற வீரர்களுக்கு தலா 20 சதவீதமும் போட்டி கட்டணத்தில் இருந்து அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியின் போதும் இதே போன்று மெதுவாக பந்து வீசிய பிரச்சனையில் ஜாசன் ஹோல்டருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரே ஆண்டில் இது போன்று 2 முறை பிரச்சனையில் சிக்கியுள்ளதால் ஜாசன் ஹோல்டருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார். ஜாசன் ஹோல்டருக்கு பதிலாக சாமுவேல்ஸ் அணியை வழிநடத்துவார் என்று தெரிகிறது.

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடக்கிறது

SHARE