இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு விஜயம் இலங்கையாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு விஜயம் செய்வது குறித்து மோடி தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.அண்டை நாடுகளான பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு மோடி விஜயம் செய்ய உள்ளதாக பாதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதல் வெளிநாட்டு விஜயமாக இலங்கைக்கு பயணம் செய்யக் கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்வேற தந்திரோபாய காரணிகளுக்காக இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள புதிய அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கு நரேந்திர மோடி விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வெளிவிவகார அமைச்சர் சுஸ்மாசுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது,