ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

326

 

 

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆஸ்ரேலியாவின் சிட்னி நகரத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடைய அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைவதாக குற்றம் சுமத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

UK_protesters_burn_Sumanthiran_photo_108979_445

சமகால அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கும் ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர் அமைப்புக்களைச் சந்திப்பதற்கும் சுமந்திரன் அங்கு சென்றிருந்தார். இந்த நிலையில் அங்குசென்ற புலம்பெயர் தமிழர்கள் பலர் சுமந்திரனின் செயற்பாடுகள் தொடர்பாக கேள்வியெழுப்பினர். ஈழத்தமிழர்களின் போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படுகிறார் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசுவாசியாகவும் செயற்படுவதாகவும் புலம்பெயர் தமிழர்கள் குற்றஞ்சுமத்தினர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு சுமந்திரன் பதிலளிக்க முற்பட்டபோது வாய்த்தர்க்கம் எற்பட்டதுடன் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் நிலைமையை சமாளித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE