உங்களது முழுப்பெயர் என்ன? சச்சினிடம் கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ்

329

இந்திய அணியின் ஜாம்பவான் சச்சினின் முழு பெயரை கேட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற ஆல் ஸ்டார்ஸ் கிரிக்கெட் போட்டிகளுக்கு சச்சின் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

இந்நிலையில் விமானத்தில் தனது குடும்பத்தினர்களுக்கு இருக்கைகள் மறுக்கப்பட்டது மற்றும் அவரது லக்கேஜை தவறான இடத்திற்கு அனுப்பியது குறித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது டூவிட் செய்திருந்தார்.

இதற்கு பதிலளித்து பிரிட்டிஷ் ஏர்வேஸ், சாரி சச்சின், உங்களது லக்கேஜ் விவரங்கள், முழு பெயர் மற்றும் முகவரியை அனுப்பினால் இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என்று கூறியது.

இதனை பார்த்த சச்சினின் ரசிகர்கள் கோபத்துடன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை விமர்சனம் செய்து வருகின்றனர்.

SHARE