பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

407

 

 

 download (1)

Posted by Satchithananthasivam Partheepan on Sunday, November 15, 2015

பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற தொடர் தாக்குதலில் ஈடுபட்டிருந்த ஏழு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமர் இஸ்மாயில் முஸ்தஃபா எனும் அந்த பிரெஞ்சு பிரஜை தீவிர இஸ்லாமியவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்தவர் என்பதால் ஏற்கனவே காவல்துறையினர் கண்காணிப்பு வட்டத்தில் இருந்துள்ளார்.

மிகவும் மோசமாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் கிடைத்த விரல் பகுதியை வைத்து அந்த 29 வயது நபர் அடையாளம் காணப்பட்டார்.

அவர் பாரீஸின் புறநகர் பகுதியான கோர்கோரன்னஸில் 1985ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தார். அவர் 2004ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை சிறு சிறு குற்றங்களுக்காக சிக்கியுள்ளார். ஆனால் சிறை தண்டனை விதிக்கப்படவில்லை. உமர் கடந்த ஆண்டு சிரியாவுக்கு சென்று வந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உமரை அடையாளம் கண்டதும் போலீசார் அவரின் தந்தை மற்றும் சகோதரணை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் அவர்களின் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தினர்.
பாரீஸ் தாக்குதல்களில் உமருக்கு தொடர்பிருந்தது தெரிய வந்ததும் அவரின் சகோதரர் போலீசில் சரண் அடைந்துள்ளார். உமரின் சகோதரர் கூறுகையில் “உமர் சிறு சிறு குற்றங்கள் செய்து வந்தது எனக்கு தெரியும். ஆனால் அவர் இப்படி ஒரு தாக்குதலை நடத்துவார் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நான் பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இல்லை. என் தாய்க்கு போன் செய்தேன். அவருக்கும் உமரின் நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியவில்லை” என்றார். உமர் பாரீஸின் தென்மேற்கில் உள்ள லூஸ் பகுதியில் இருக்கும் மசூதிக்கு தினமும் சென்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாரிஸ் நகரில் நடைபெற்ற தொடர் தாக்குதல்களுக்கு தாமே காரணம் என இஸ்லாமிய அரசு என தம்மைக் கூறிக் கொள்ளும் அமைப்பு அறிவித்துள்ளனர்.

பாரீஸ் நகரில் 6 இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 129 பேர் பலியாகியுள்ளனர், 352 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களில் 80 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரஞ்சுதகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல்களை நடத்தியவர்கள் நன்றாக திட்டமிட்டு மூன்று குழுக்களாக பிரிந்து செயல்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் தற்கொலை அங்கி அணிந்து கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளை வைத்திருந்தனர் எனவும் பிரெஞ்சு அரச வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

பாரிஸ் தாக்குதல்கள்:பெல்ஜியத்தில் பலர் கைது:-
பாரிஸில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் பலரை, பெல்ஜிய நாட்டுத் தலைநகர் பிரசல்ஸில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தீவிரவாதிகளின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளான இடங்களில் ஒன்றான பட்டாகிளான் அரங்கத்திற்கு அருகே நின்ற கார் ஒன்று, பெல்ஜிய நாட்டின் பதிவுத் தகட்டுடன் காணப்பட்டதை அடுத்து, இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக பெஜ்ஜியம் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவர், வெள்ளிக்கிழமை மாலை பாரிஸில் இருந்துளளார் என பெல்ஜியப் பிரதமர் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
மிகக் கொடூரமான இத்தாக்குதல்களை நடத்தியவர்களில் ஒருவர் பாரிஸின் புறநகர்ப்பகுதியை சேர்ந்தவர் என்றும் அவர் கடந்த காலத்தில் குற்றச் செயல்கள் புரிந்துள்ளதற்கான பதிவுகள் உள்ளன என்றும் பிரெஞ்ச் அரசின் தலைமை வழக்கறிஞர் பிரான்சுவா மொலீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மற்றொரு தாக்குதலாளி சிரிய நாட்டு கடவுச் சீட்டு வைத்திருந்தார் எனவும் பிரெஞ்சு அரச தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அனைத்து தாக்குதல்தாரிகளும் தானியங்கி கலாஷ்னிகோவ் துப்பாக்கியை வைத்திருந்ததுடன் தற்கொலை அங்கியும் அணிந்திருந்தனர் எனவும் அவர் மேலும் கூறினார்.

இத்தாக்குதல் பிரான்ஸின் மீது நடத்தப்பட்ட ஒரு போர் என்றும், தமது அரசு ஈவு இரக்கமின்றி எதிர்தாக்குதலை நடத்தும் எனவும் பிரெஞ்ச் அதிபர் பிரான்ஸ{வா ஒலாந் அறிவித்துள்ளார்.

SHARE