டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் மற்றும் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.இதில் சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டைன் முதலிடத்தில் உள்ளார்.
தொடர்ந்து இங்கிலாந்தின் ஆண்டர்சன், பாகிஸ்தானின் யாசர் ஷா இரண்டு, மூன்று இடங்களில் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்திய இந்தியாவின் ஜடேஜா, எட்டு இடங்கள் முன்னேறி 13வது இடத்தில் உள்ளார். துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தை அவுஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், நியூசிலாந்தின் வில்லியம்சன் பகிர்ந்து கொண்டுள்ளனர். துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியல்
பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியல் |