பாரீஸில் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் தீவிரவாதியின் கலக்கல் செல்பி: வெளியான புதிய தகவல்கள்!

274
பாரீஸ் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்ட தற்கொலைப்படை பெண் தீவிரவாதி குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.Hasna Ait Boulahcen (26) என்ற இப்பெண் தீவிரவாதியின் குடும்பத்தினர், மொராக்கோவில் இருந்து 1973 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு குடியேறியுள்ளனர்

மிகவும் சுறுப்பாகவும், பிறரிடம் கலகலப்பாகவும் பேசும் தன்மையுடைய இவருக்கு மதத்தின் மீது நம்பிக்கை கிடையாது, மேலும் குரான் படிக்க பழக்கம் கிடையாது என்று இவரது இளைய சகோதரர் Youssouf Ait Boulahcen இவள் குறித்த தகவல்களை கூறியுள்ளார்.

மேலும், ஆல்கஹால், சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான அவள், ஜீன்ஸ் ஆடைகளை தான் அதிகம் விரும்பி அணிவாள்.

சிகை அலங்காரம், ஆடை அலங்காரம் போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தும் குணம் கொண்ட இவர்,  திடீரென கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்தான் இஸ்லாமிய ஆடையான பர்தா அணிய ஆரம்பித்தார்.

மேலும், சமூகவலைதளமான பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் அதிக கவனம் செலுத்தி தனக்கென ஒரு உலகத்தில் வாழ ஆரம்பித்த அவளுக்கு அறிவுரைகள் வழங்கினேன்.

ஆனால், அவளோ எனக்கு அறிவுரை கூறுவதற்கு நீ எனது தந்தையோ, அல்லது எனது கணவனோ கிடையாது, என்னை தனியாக விட்டுவிடு என்று கூறிவிட்டாள் என்று  பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சகோதரி எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களையும் கொடுத்துள்ளார்.

women_terroistselfie_002 women_terroistselfie_003 women_terroistselfie_004 women_terroistselfie_005

SHARE