ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலும் அழிக்கும் விதமாக பிரான்ஸ் மேலும் ஒரு போர் விமானத்தை சிரியாவுக்கு அனுப்பிவைத்துள்ளது.

330

 

பிரான்ஸின் பாரீஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள்
நட்த்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பலியாகினர்.
மேலும் பலர் காயமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சார்லெஸ் டி கவுலி என்ற போர் விமானம் ஒன்றை சிரியாவுக்கு பிரான்ஸ் அனுப்பிவைத்துள்ளது.
மேலும் திங்கள் முதல் அந்த போர் விமானத்தின் மூலமாக தாக்குதலை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புதுறை அமைச்சர்  jean-Yves le Drain தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, ஐ.எஸ். தீவிரவாதிகளை உலக அளவில் நாம் நிர்மூலமாக்குவதே அவர்களை அழிக்க ஒரே வழி
மேலும், இந்த தாக்குதலில் இணைந்து செயல்பட விரும்பும் ஏணைய நாடுகளை சேர்ந்தவர் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய தரைக்கடல் பகுதியின் கிழக்கு திசையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இந்த போர் விமானத்தின் மூலம் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE