வெடித்து சிதறிய ரஷ்ய விமானத்தின் எந்த இருக்கைக்கு அடியில் வெடிகுண்டு இருந்தது? வெளியான தகவல்கள்

278
கடந்த 31 ஆம் திகதி எகிப்தின் சினாய் தீபகற்ப பகுதியில் வெடித்து சிதறிய ரஷ்ய விமானத்தின் எப்பகுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 31ஆம் திகதி எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி அன்னாசி பழச்சாறு பாட்டிலில் வெடிகுண்டுகளை மறைத்துவைத்து எடுத்துக்கொண்டு சென்று வெடிக்கவைத்தாக கடந்த 19 ஆம் திகதி ஐ.எஸ் அமைப்பு தனது நாளிதழில் செய்தி வெளியிட்டது.

இந்நிலையில், விமான விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், விமானதின் மையப்பகுதி வரிசையில் உள்ள 30 அல்லது 31 வது இருக்கையின் அடியின் வெடிகுண்டுகள் பொருதப்பட்டிருக்கின்றன என்று கண்டுபிடித்துள்ளனர்.

விமானத்தின் மையப்பகுதியில் வெடிகுண்டுகளை வைப்பதன் மூலம் ஒரே நேரத்தில் அனைவரும் இறந்துவிட வாய்ப்பிருக்கிறது என்று தீவிரவாதிகள் திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.

இந்த 31A இருக்கையில் Maria Ivleva (15) என்ற சிறுமியும், 31B இருக்கையில் அவரது தாயாரும் இருந்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE