பரிஸ் 18 இல் கைவிடப்பட்டிருந்து, காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட, பயங்கராதிகளின் கறுப்பு Clio சிற்றுந்தில், பரிசின் புறநகரிலும், விமானநிலையத்தருகிலும், சாலா அப்தெல்சலாம் திரிந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

322

 

பரிஸ் 18 இல் கைவிடப்பட்டிருந்து, காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட, பயங்கராதிகளின் கறுப்பு Clio சிற்றுந்தில், பரிசின் புறநகரிலும், விமானநிலையத்தருகிலும், சாலா அப்தெல்சலாம் திரிந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

12249567_963508593721498_2672559308725781324_n

11ம் திகதி நவம்பர் மாதம், அதாவது தாக்குதல் நடாத்தப்படுவதற்கு இரண்டு நாட்களின் முன்னர், Oise இலுள்ள ஒரு எரிபொருள் நிலையத்தில், இந்தச் சிற்றுந்திற்கு, சாலா எரிபொருள் நிரப்பியுள்ளார். அந்தச் சமயத்தில், இன்னுமோர் இளைஞன் இவருடன் இருந்துள்ளார். அதன் பின்னர் தாக்குதல் தினமான 13ம் திகதி, சார்ள்துகோல் விமானநிலைத்தின், ADP யின் தளத்திலும் இவர் காணப்பட்டுள்ளார். இங்கும் சாலாவுடன், அதே இளைஞன் கூட இருந்துள்ளார்.

கண்காணிப்பு ஒளிப்பதிவின் மூலம், சாலா அப்தெல்சலாமுடன் சேர்ந்து திரிந்தவர், 25 வயதுடையவர் என்றும், இவரும் பெல்ஜியம் காவற்துறையினரால் தேடப்பபடும் குற்றவாளி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசிலும், சன்துனியிலும், 130 பேரின் உரிரைக்குடித்த, கொடூரப் பயங்கரவாதத் தாக்குதலின், பிரதான பயங்கரவாதியும், பயங்கரவாதிகளிற்கான, தங்ககம் ( Hotel ) மற்றும், போக்குவரத்துக்கள், ஆயுதவிநியோகங்கள், போன்றவற்றைச் செய்து, தாக்குதலிலும் ஈடுபட்ட, சாலா அப்தெல்சலாம், பரிசின் பிரதான தளங்களில், சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளமை, பரிசின் பாதுகாப்பினைப் பெரும் கேள்விக்குறிக்குள்ளாக்கி உள்ளது

SHARE