ரஷ்யாவுக்கு மீண்டும் அதிர்ச்சி: மீட்பு உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் 

281
துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தின் விமானிகளை மீட்க அனுப்பப்பட்ட உலங்கு வானூர்தியை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிரிய எல்லை பகுதியில் ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக போர் விமானம் பறந்ததாக கூறப்படுகிறது

இதையடுத்து துருக்கி ராணுவத்தினர் அந்த விமானத்தை சுட்டு வீழ்த்தினர். மேலும் சுடுவதற்கு முன்னர் 5 நிமிடத்தில் 10 முறை எச்சரிக்கை விடுத்ததாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் காணாமல் போன இரண்டு விமானிகளை மீட்கும் நடவடிக்கையில் ரஷ்யாவின் உலங்கு வானூர்தி ஒன்று ஈடுபட்டிருந்தது.

அப்போது சிரியாவை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் அதிநவீன ஏவுகணை  மூலம் இந்த உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

அவர்கள் பயன்படுத்திய ஆயுதம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் உலங்கு வானூர்தியின் விமானி பலியானாரா என்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்பட்டவில்லை.

இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் போர் விமானம் மற்றும் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்யாவை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

SHARE