ஒன்றாக இருந்த ஏழுபிறப்புக்களும் அவர்களின் எதிர்காலத்திற்காக தனித்தனியாக புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதென பெற்றோர் தெரிவித்தனர்.

346

 

யு.எஸ்.-நவம்பர் 19, 1997ல் பொபி மக்கொயி மற்றும் அவரது கணவன் கென்னி இருவரும் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டனர். உலகிலேயே முதலாவது உயிருடன் இருக்கும் ஏழு உடன்பிறப்புக்களை ஒரே நேரத்தில் பிரசவித்தவர் என்பதே இதற்கு காரணமாகும்.யு.எஸ்சில் ஐயோவா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்தது.

கென்னி யூனியர், அலெக்சிஸ் ,கெஸ்லி, நேத்தன், பிரான்டன் மற்றும் ஜோஎல் ஆகிய குழந்தைகள் 2.5 முதல் 3.4இறாத்தல்கள் எடையுடன் பிறந்தனர்.

இவர்கள் அனைவரும் தங்கள் 18வது வயதை அடைந்துள்ளனர். உயர்தர பாடசாலை கல்வியை முடித்து பட்டம் பெற்ற பின்னர் தங்கள் சொந்த வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்கின்றனர்.
பிரான்டன் இராணுவத்தில் சேர்வதற்காக பயணத்தை யூன்1ந்திகதி ஆரம்பிக்கின்றார். மற்றய அறுவரும் கல்லூரியில் சேர திட்டமிட்டுள்ளனர்.

பொபி மற்றும் கென்னி தம்பதிகளிற்கு 19வயதில் பெண் ஒருவர் உள்ளார். அவர் கடந்த கோடைகாலத்தில் திருமணம் செய்து கொண்டார்.

மூத்த மகள் பிறந்ததும் இவர்கள் செயற்கை கருத்தரித்தல் முறையை பின்பற்றினர். ஆனால் பொபி தான் ஏழு கரு முட்டைகளை சுமப்பதை அறிந்தார். இருப்பினும் மத நம்பிக்கை மிக்க இவர்கள் ஏழையும் வைத்திருக்க தீர்மானித்தனர்.

குழந்தைகள் சுகமாக பிறந்ததும் அவர்களின் எதிர்காலம் குறித்த சிந்தனை தொடங்கியது. ஆனாலும் அவர்கள் வசிப்பதற்கு பிள்ளைகள் பிறந்ததும் ஏழு படுக்கை அறைகளை கொண்ட வீடு நன்கொடையாக வழங்கப்பட்டது.

பிள்ளைகளின் கல்வி குறித்து இவர்கள் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படவில்லை. பல பல்கலைக்கழகங்கள் இவர்களிற்கு இலவச கல்வி வழங்க முன்வந்தன. ஏழு பேர்களில் மூவர் மிசூரி பல்கலைக்கழகத்தில் சேர திட்டமிட்டனர்.

நேத்தன் மற்றும் அலெக்சிஸ் இருவரும் பிறக்கும் போதே பெரு மூளை வாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

சத்திர சிகிச்சை மூலம் நடக்க ஆரம்பித்தனர். தாங்கள் ஏழு பேர்களும் சிறந்த நண்பர்களாக தங்களை கருதி கொண்டார்களே இன்றி சகோதர சகோதரிகளாக அல்ல என அலெக்சிஸ் கூறினார்.

ஒன்றாக இருந்த ஏழுபிறப்புக்களும் அவர்களின் எதிர்காலத்திற்காக தனித்தனியாக புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதென பெற்றோர் தெரிவித்தனர்.

sep5sep1 sep2 sep6 sep3 sep4 sep8

– See more at: http://www.canadamirror.com/canada/52801.html#sthash.T2RkE3MG.dpuf

SHARE