291
 

mum_murder_002பிரித்தானிய நாட்டில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்கொட்லாந்தில் உள்ள Kinghorn என்ற சிரிய நகரில் Carol-Anne (54) என்ற தயார் தனது மகள் மற்றும் 3 மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

மகன்களில் ஒருவரான ரோஸ் டாக்கர்ட்(31) என்பவருக்கும் தாயாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஆடம்பரமான செலவுகளை செய்துவருவதாக தாயார் அவரை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 22ம் திகதி, தனது தாயாரை இரக்கமின்றி கொலை செய்த ரோஸ், சடலத்தை கேரவன் என்ற வாகனத்தில் மறைத்து வைத்துள்ளார்.

பின்னர், பொலிசாருக்கு தகவல் அளித்த ரோஸ் ‘தனக்கும் தாயாருக்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டதாக’ புகார் அளித்துள்ளார்.

புகாரை பெற்ற பொலிசார் தாயாரை பல இடங்களில் தேட தொடங்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில், ரோஸின் நடவடிக்கைகளை கண்காணித்த பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது

தாயாரின் கிரிடிட் கார்டுகளை எடுத்துக்கொண்டு அவர் இஷ்டம்போல் செலவளித்து வந்துள்ளார்.

மேலும், இணையத்தளம் மூலமாக பாலியல் தொழிலாளிகளை வீட்டிற்கு அழைத்து வரும் முயற்சியிலும் அவர் ஈடுப்பட்டு வந்துள்ளார்.

தாயார் காணாமல்போன நிலையில் அவரது மகன் வருத்தப்படாமல் ஆடம்பரமாக சுற்றி திரிகிறாரே என பொலிசாரின் சந்தேகம் வலுத்துள்ளது.

பின்னர், கடந்த ஜனவரி 11ம் திகதி ரோஸின் வீட்டிற்கு சென்று அதிரடியாக சோதனை செய்தபோது, வாகனத்தில் அழுகிய நிலையில் தாயாரின் உடல் இருந்ததை கண்டுபிடித்ததும் ரோஸை அதிரடியாக பொலிசார் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ரோஸின் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு நேற்று வெளியாகியுள்ளது.

ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக பெற்ற தாயாரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய குற்றத்திற்காக ரோஸிற்கு 18 வருடங்கள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

SHARE