311

passenger_kicked_plane_002

பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள் 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள் 4 பேர் சந்தேகப்படும்படியாக நடந்து கொள்வதாக பெண் பயணி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட அந்த 4 பேரில் ஒருவர் வேற்று மொழியில் தமது கைப்பேசி வழியாக தொடர்ந்து பேசி வந்ததாகவும்,

அவரது கைப்பேசியில் பி.எல்.ஆர். டைனமேட் எனும் வார்த்தையுடன் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளதாகவும் அந்த பெண்மணி விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த 4 பேரையும் உடனடியாக விமானத்தில் இருந்து இறக்கிய விமான ஊழியர்கள் பொலிசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து போக்குவரத்து ஆணைய பொலிஸ் அதிகாரிகளும் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளும் அவர்களை விசாரித்துள்ளனர்.

விசாரணையில் அவர்களது கைப்பேசியில் அச்சுறுத்தும் தகவல்கள் எதுவும் வந்ததாகவோ இவர்கள் அனுப்பியதாகவோ பயங்கரவாத தடுப்பு அதிகாரிகளால் உறுதி செய்ய முடியவில்லை.

அச்சுறுத்தும்படியாக அவர்களின் நடவடிக்கையும் இல்லாது கண்டு அவர்களை விடுதலை செய்த அதிகாரிகள், தொடர்ந்து பயணிக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.

பாரிஸ் நகரில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பின்னர் இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE