தென் ஆப்பிரிக்காவை சுருட்டியது எப்படி? சொல்கிறார் அஸ்வின்

316

இந்திய அணியின் வெற்றிக்கு ஆடுகளம் அதிகம் உதவியதாக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

நாக்பூரில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா, டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

இந்தப் போட்டியில் அஸ்வின் 12 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த வெற்றி குறித்து அஸ்வின் கூறுகையில், “கடைசி நேரத்தில் ஆடுகளம் சற்று மந்தமாக காணப்பட்டது. இதனால் விக்கெட்டுகள் விழுவதில் சரிவு ஏற்பட்டது.

ஒரு அணி வெற்றிக்காக விளையாடியது. துடுப்பாட்ட வீரர்கள் சதம் அடிக்க இறங்குகின்றனர். நான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த களமிறங்குகிறேன்.

உணவு இடைவேளைக்குப் பிறகு அமித் மிஸ்ரா நன்றாக பந்து வீசினார்.

டுபிளசி, அம்லா நெருக்கடி கொடுத்து விளையாடி வந்த நிலையில் அவர்களது விக்கெட்டுகளை மிஸ்ரா வீழ்த்தியது திருப்பு முனையை ஏற்படுத்தியது.

தங்களது ஆட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து விளையாடுபவர்கள் இது போன்ற ஆடுகளத்தில் சிறப்பாக செயல்பட முடியும்” என்று தெரிவித்துள்ளார்

SHARE