கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பெண் நடுவர்கள்! ஆச்சரியப்படுத்திய ஐ.சி.சி

331

கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக பெண் நடுவர்களை நியமித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது சர்வதேச கிரிக்கெட் வாரியம்.

1934ம் ஆண்டு முதலே அதிகாரப்பூர்வமாக மகளிர் கிரிக்கெட் தொடங்கினாலும், அந்தப் போட்டிகளில் நடுவர்களாய் ஆண்களே இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கிரிக்கெட்டில் பெண்களின் பங்கீட்டையும், அவர்களிடையே இதன் மீதான ஆர்வத்தையும் அதிகரிப்பதற்காக சர்வதேச கிரிக்கெட் வாரியம் வித்தியாசமான முடிவை எடுத்துள்ளது.

அதாவது, உள்ளூர் போட்டிகளில் மட்டுமே பெண் நடுவர்கள் செயல்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக 4 பெண் நடுவர்கள் சர்வதேச போட்டிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கேத்தி கிராஸ் (நியூசிலாந்து), க்ளேர் பொலோசக் (அவுஸ்திரேலியா), சுயூ ரெட்ஃபெர்ன் (இங்கிலாந்து) மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் (ஜமைக்கா) ஆகிய 4 பேர் தான் ஐ.சி.சி.யின் அதிகாரப்பூர்வ நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தாய்லாந்தில் நடக்கும் மகளிர் டி20 உலகக்கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு நடுவர்களாக செயல்படவுள்ளனர். இந்தப் போட்டிகள் இன்று முதல் அடுத்த மாதம் 5ம் திகதி வரை நடைபெறுகிறது

SHARE