டிராவிட் தான் எனது பயிற்சியாளர் என்பதை நம்பமுடியவில்லை: சர்பிராஸ் கான்

356

 

 

CARDIFF, WALES - JUNE 20: The Indian team look on during the ICC Champions Trophy Semi Final match between India and Sri Lanka at SWALEC Stadium on June 20, 2013 in Cardiff, Wales. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

 

19 வயதிற்குட்பட்டோருக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தியா, வங்கதேசம், ஆப்பானிஸ்தான் நாடுகளுக்கிடையிலான முத்தரப்பு போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது.

இதன் இறுதிப்பொட்டியில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற வங்கசேதம் களத்தடுப்பை தெரிவு செய்தது. ஆனால், இந்தியாவின் அபார பந்து வீச்சில் அந்த அணி 36.5 ஓவரில் 116 ஓட்டங்களில் சுருண்டது.

பின்னர் 117 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

சர்பிராஸ் கானின் அபார ஆட்டத்தால் 13.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கிண்ணம் வென்றது.

சர்பிராஸ் கான் 27 பந்தில் 59 ஓட்டங்கள் (9 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட் இந்திய ‘ஏ’ அணிக்கு பயிற்சியாளராக உள்ளார்.

இவரது பயிற்சியில் இந்திய ‘ஏ’ அணி, அவுஸ்திரேலியா ‘ஏ’மற்றும் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கிடையிலான முத்தரப்பு தொடரையும், தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் தொடரையும் வென்றது.

தற்போது வங்கதேசத்தில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்டோருக்கான முத்தரப்பு கிரிக்கெட் தொடரையும் வென்று அசத்தியுள்ளது.

நம்ப முடியவில்லை:-

வெற்றிக்கு உதவிய சர்பிராஸ் கான் கூறுகையில், “இப்போது வரை டிராவிட் சதம் அடிப்பதை தொலைக்காட்சியில் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் அவர் எனக்கு பயிற்சியாளர் என்பதை இன்னும் நம்ப முடியவில்லை.

அவரது பயிற்சியின் மூலம் எங்களது கனவு நனவாகி உள்ளது. கண்டிப்பாக அவரது அனுபவங்கள் உலகக்கிண்ணத்தை வெல்ல எங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE