ஜப்பான் பிரதமர் இந்தியா வருகை; ரூ.98 ஆயிரம் கோடி ‘புல்லட் ரெயில்’ ஒப்பந்தம் கையெழுத்தாகிறது

297

 

புதுடெல்லி,

ஜப்பான் பிரதமர் சின்சோ அபே 3 நாள் பயணமாக டெல்லிக்கு நாளை வருகிறார். 9-வது இந்திய-ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடியுடன் அபே கலந்து கொள்கிறார். ஆசியாவின் இரு பெரிய பொருளாதார நாடுகள் நட்புறவை வலுப்படுத்தும் நிகழ்வாகவே அபேயின் இந்திய வருகை கருதப்படுகிறது.

இந்த மாநாட்டில் கடந்த ஒரு ஆண்டில் ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையே பொருளாதார உறவுகள், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. சென்ற முறை இந்த மாநாடு டோக்கியோவில் நடந்தது. அப்போது இருநாட்டு பிரதமர்களும் இந்தியா-ஜப்பானுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்துவோம் என சூளுரைத்து இருந்தனர்.

இந்நிலையில், ஜப்பான் பிரதமரின் வருகையின் போது நாளை இந்தியாவின் முதல் புல்லட் ரெயில் நெட்வொர்க் அமைப்பதற்கான ரூ.98 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாக அதிக வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE