கருவில் உள்ள சிசுவிற்கு நடந்த இதய அறுவைச் சிகிச்சை: மருத்துவர்கள் சாதனை

300
கேரள மருத்துவர்கள் கருவில் உள்ள 29 வார சிசுவிற்கு வெற்றிகரமாக இதய அறுவைச் சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர்.
கேரளாவில் அமிர்தா மருத்துவ அறிவியல் ஆய்வுக் கழக மருத்துவமனையில் தாயின் கருவில் 29 வார சிசுவாக இருக்கும் குழந்தைக்கு இதயத்தில் சிறு குறைபாடு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதயத்திற்கு செல்லும் ரத்தம் அடைபட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் இருந்ததால், கருவில் உள்ள சிசுவிற்கு ‘aortic valvuloplasty’ என்ற இதய அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

மருத்துவர் பாலு வைத்தியநாதன் என்பவரது தலைமையில் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

பாலு வைத்தியநாதன் கூறுகையில், இந்த அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

மேலும், இனி வரும் வாரங்களில் கரு நன்றாக வளர்ச்சியடைந்து, நல்ல படியாக பிரசவம் நடைபெறும் என நம்புகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

SHARE