அன்னை தெரசாவின் ரத்தம் வத்திக்கான் செல்கிறது.

421

 

கொல்கத்தாவில் உள்ள மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அன்னை தெரசாவின் ரத்த மாதிரி ரோமன் கத்தோtherasa_2524240fலிக்க சபையினரால் பேரின்ப நிலை அடைய செய்வதற்காக வாடிகன் கொண்டு செல்லப்பட உள்ளது.

அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படுவதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது.

அன்னை தெரசா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த மோனிகா பெஸ்ரா என்ற பெண்ணின் வயிற்று புற்றுநோயை 2002–ம் ஆண்டு குணப்படுத்தி அற்புதம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக அவருக்கு 2003–ம் ஆண்டு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான் பால் அருளாளர் பட்டம் வழங்கினார்.

இதற்கு அடுத்த நிலை, புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் இரண்டாவது அற்புதம் நிகழ வேண்டும்.

இந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த ஒரு ஆண் மூளை கட்டிகளால் அவதியுற்றபோது, அவரது உறவினர்கள் அன்னை தெரசாவை பிரார்த்தித்தனர். அதில் அவர் அற்புதமாக குணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதை போப் ஆண்டவர் பிரான்சிஸ், அங்கீகரித்துள்ளார். இரண்டாவது அற்புதத்தையும் அன்னை தெரசா செய்துள்ள நிலையில், அவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கு போப் ஆண்டவர் ஒப்புதல் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சிக்காக கொல்கத்தாவில் மியூசியம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள அன்னை தெரசாவின் ரத்த மாதிரி வாடிகனுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

வாடிகன் நகரில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இந்த நிகழ்விற்காக அன்னை தெரசா உருவாக்கிய மிஷனரிஸ் ஆப் சாரிட்டிஸ் மற்றும் கொல்கத்தா மறை மாவட்டம் சார்பில் முக்கிய நிர்வாகிகள் இந்த ரத்த மாதிரியை கொண்டு செல்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி அன்னை தெரசா பிறந்த தினமான அக்டோபர் 24-ம் தேதியிலோ அல்லது இறந்த தினமான செப்டம்பர் 5-ம் தேதியிலோ நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

SHARE