பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய 473 பயணிகள்

297
கென்யா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரான்ஸ் விமானத்தில் வெடிகுண்டு இருந்ததை அந்த நாட்டு வெடிகுண்டு நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

 

இரண்டாவது இணைப்பு

பிரான்ஸ் விமானத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பொருள் பயங்கர வெடிகுண்டு என கென்யாவின் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

இதனிடையே அந்த விமானத்தில் பயணம் செய்த இரண்டு பயணிகள் மீது இந்த வெடிகுண்டு விவகாரத்தில் சந்தேக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் கழிவறையில் சந்தேகப்படும்படியான பொருள் இருப்பதாக தகவல் கிடைத்த உடன் விமானத்தினை கென்யாவில் திருப்பி விட்டு தரையிறக்கியதால் பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 459 பேரும் 14 விமான ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது மட்டுமல்ல அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் இணைப்பு

மொரீஷியசில் இருந்து 459 பயணிகளுடன் பாரிஸ் நோக்கி பயணமான விமானத்தில் கழிவறையில் சந்தேகத்துக்குரிய பொருள் ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வெடிகுண்டாக இருக்கலாம் என்ற அச்சத்தில் அந்த விமானத்தை மொம்பாசா விமான நிலையம் நோக்கி திருப்பி விட்டு அங்கு அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

தொடர்ந்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்களை வெளியேற்ரிய நிபுணர்கள் குழு, விமானத்தின் கழிவாறையில் இருந்து சந்தேகத்துக்குரிய அந்த பொருளை அப்புறப்படுத்தியுள்ளனர்.

விமான கழிவறையில் இருந்து எடுக்கப்பட்ட பொருளை சிறப்பு நிபுணர்கள் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது, இதன் ஒருபகுதியாக அந்த விமான நிலையத்தை தற்காலிகமாக மூடியுள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட அந்த பொருள் வெடிக்கும் தன்மைகொண்டதா அல்லது பயணிகளை அச்சுறுத்த விஷமிகள் செய்த சதி வேலையா என்பதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக சிறப்பு பொலிஸ் அதிகாரி Joseph Boinnet தெரிவித்துள்ளார்.

SHARE