சிறைக்குள் கடுமையாக நடந்துகொண்ட பொலிசார்: 875,000 டொலர் இழப்பீடு வழங்க தீர்ப்பு 

331

 

அமெரிக்காவில் சிறை கைதி ஒருவரிடம் பொலிசார் கடுமையாக நடந்துகொண்டதாக எழுந்த புகாரை அடுத்து அவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் சிக்காகோ மாகாணத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டியதாக 47 வயதான கஸ்ஸாண்ட்ரா என்ற பெண்மணி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த இந்த வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட கஸ்ஸாண்ட்ரா Skokie கிராமத்தில் அமைந்துள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறைக்குள் செல்லும் கஸ்ஸாண்ட்ராவை ஒரு பொலிஸ் அதிகாரி எட்டித்தள்ளியதில், அவர் அந்த அறையில் இருந்த சிமென்ட் படுக்கையின் மீது மோதி விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த கஸ்ஸாண்ட்ராவுக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டதுடன் பற்களும் சில உடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு தொடர்ந்த கஸ்ஸாண்ட்ரா சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியிடம் இருந்து தமக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தரவேண்டும் எனவும் முறையிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பந்தபட்ட அதிகாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வேண்டுமென்றே கஸ்ஸாண்ட்ராவை பிடித்து தள்ளியதாக தெரிய வந்துள்ளது.

விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட நபருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து Skokie பகுதி நிர்வாகம் கஸ்ஸாண்ட்ராவுக்கு 875,000 டொலர்கள் இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் Skokie நகர நிர்வாகம் கஸ்ஸாண்ட்ராவிடம் மன்னிப்பு கோரியதுடன் உரிய நடவடிக்கை எடுக்கவும் உறுதியளித்துள்ளனர்.

SHARE