லிங்குசாமி என்றதும் விலகிய விக்ரம்

478
மில்டன் ஒரு படத்தை இயக்கப் போகிறார் அல்லவா? இப்படம் ஷூட்டிங்குக்கு போகிறதுக்கு முன்பே படத்தை வாங்க நான், நீ என்று ஒரு கும்பல் போட்டி போடுகிறது.
தற்போது வந்த தகவல் படி இப்படத்தை 24 ரூபாய் கோடிக்கு வாங்கி கொள்வதாக ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஃபாக்ஸ் ஸ்டார் பேசுவதற்கு முன்பே லிங்குசாமி நிறுவனம் நாங்கள் ரூ.24 கோடி என்ன ரூ. 28 கோடி தருகிறோம் என்று சொல்லி இருந்தோம் அது எப்படி இப்போ நீங்கள் அவர்களுக்கு கொடுக்கலாம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.இதை கேட்ட விஜய் மில்டன் சந்தோசத்தில் மிதக்க ஃபாக்ஸ் ஸ்டார் கொடுபவதை விட 4 கோடி எக்ஸ்ட்ரா வருகிறது என்று சந்தோசத்தில் விக்ரமிடம் இந்த விஷயத்தை சொல்ல, அவர் பொங்கி எழுந்தார்.

இந்த படம் லிங்குசாமிக்கு விற்கப்படுகிறது என்றால் நான் இந்த படத்திலிருந்து விலகி கொள்கிறேன் என்றாராம்.

உடனே நீங்கள் தான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்லி விஜய் மில்டன் விக்ரமை சமாதனபடுத்தி, என்னசெய்வது என்று தெரியாமல் தற்போதைக்கு விற்கிற வேலையெல்லாம் தள்ளிபோட்டு விட்டாராம்.

SHARE