அமெரிக்காவை புரட்டிப்போட்ட சூறாவளி: 11 பேர் பலி.. மிசிசிப்பியில் அவரச நிலை பிரகடனம்

320

 

அமெரிக்காவின் மிசிசிப்பியில்  சூறாவளி புயல் தாக்கியதில் 11 பேர் வரை பலியாகியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மிசிசிப்பி , டென்னிசி மற்றும் அர்கன்சஸ் பகுதிகளில் நேற்று சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியது.

வடக்கு மிசிசிப்பி அருகே தனது பயணத்தை தொடங்கிய இந்த சூறாவளி மேற்கு டென்னிசி வரை சுமார் 150 மைல் தூரத்துக்கு சேதத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

மொத்தம் 14 புயல்கள் வரை தாக்கியிருக்கலாம் என்று புயல் கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சூறாவளி காரணமாக 10 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் 40 பேர் வரை காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசிசிப்பி பகுதியில் 6 பேரும். டென்னிசியில் 3 பேரும் அர்கன்சஸ் பகுதியில் ஒருவரும் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

20க்கும் மேற்பட்ட விடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால் வெள்ள எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் அவசர நிலையும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியின் காரணமாக மிசிசிப்பியில் உள்ள 55 நகரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE