சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டமை சிறந்தது

651

மத்திய கிழக்கு நாடுகளில் 9 இலங்கையர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக வெளிநாடுகளில் பணிப்புரியும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் உணர்வுபூர்வமான மனிதர்களின் கூட்டு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

Untitled

சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டமை சிறந்தது என்றாலும் மேலும் பலர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பவர்களில் இரண்டு பேர் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

சவூதியில் கல்லெறிந்து கொலை செய்வது ஒரு தண்டனையாக இருந்த போதிலும் கடந்த 9 வருடங்களாக அந்த தண்டனை செயற்படுத்தப்படாமல் இருப்பதன் காரணமாக பெண்ணை காப்பற்ற முடிந்துள்ளதாக அந்த அமைப்பை சேர்ந்த குமாரி குமாரகமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தலையிட்டு அந்த பெண்ணின் உயிரை காப்பற்றியமை குறித்து மகிழ்ச்சியடைந்த போதிலும் மேலும் 9 பேர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

இவர்களை தவிர 300 முதல் 600 பேர் வரையில் சட்ட உதவிகள் இன்றி சவூதி சிறைகளில் இருப்பதை கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

அரசாங்கம், வெளிநாடுகளில் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு சட்ட உதவிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை வெளிநாடுகளில் இவ்வாறு மரண தண்டனை எதிர்நோக்கியிருக்கும் மற்றும் சிறைகளில் உள்ளவர்கள் தொடர்பாக எதிர்காலத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள வெளிவிவகார பிரதியமைச்சர் கலாநிதி. ஹர்ச டி சில்வா, வெளிநாடுகளில் லட்சகணக்கான இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் இலங்கையின் சட்ட உதவி தேவையென கோரிக்கை விடுப்போருக்கு உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.

அனைவருக்கும் சட்ட உதவிகளை வழங்குவது சிரமமானது எனவும் அந்த நாடுகளின் சட்டம் குறித்து வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு தெளிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருவதாகவும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

SHARE