அமெரிக்க விமான நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள் 

300
அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரிகள் வைத்துள்ளனர். விமான பயணிகள் ஆயுதங்களை கொண்டு செல்ல தடை இருந்த போதும் அதை மீறி ஆயுதங்களை எடுத்துச் செல்ல பயணிகள் முயற்சிப்பதுண்டு. அந்த வகையில் அமெரிக்க விமான நிலையங்களில் இருந்து தடையை மீறி எடுத்துச் செல்ல முயன்ற ஆயுதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் குவியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைத்துள்ளனர்.இதில் சமையலறையில் பயன்படுத்தும் இறைச்சி நொறுக்கும் கத்தி முதல் யுத்தகாலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் வரை பயணிகள் கொண்டு செல்ல முயன்றுள்ளனர். விமான நிலையங்களில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தங்கள் பெட்டிக்குள் பதுக்கி வைத்துக்கொண்டு பயணிகள் வருவதனால், அவர்களை சோதனை இட்டு ஆயுதங்களை பறிமுதல் செய்வது உள்ளிட்ட காரணங்களால் எஞ்சிய பயணிகளின் பயணமும் காலதாமதமாவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 2,500 துப்பாக்கிகளை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர், இது கடந்த ஆண்டை விட (2,212) அதிகம் என கூறப்படுகிறது. அதிகாரிகளால் பிடிக்கப்படும் பெரும்பாலான பயணிகள் ஆயுதங்களை வீட்டில் விட்டுவர மறந்ததாவே காரணம் தெரிவிப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள், இதுபோன்ற பயணிகளிடம் இருந்து 7,400 பவுண்ட் வரை பிழை வசூலித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

SHARE