கலையிழந்து காணப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்கள்

291
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் இருந்து மீளாத மக்கள் புத்தாண்டு தினத்தை மிகுந்த ஏமாற்றத்துடன் எதிர்க்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நகரங்களை ஒப்பிடுகையில் புத்தாண்டு தினத்தன்று நடத்தப்படும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் வருடந்தோறும் கலை கட்டும். ஆனால், இந்த 2016ம் ஆண்டு புத்தாண்டு பிரான்ஸ் குடிமக்களுக்கு, குறிப்பாக பாரீஸ் நகர மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையும் உற்சாகமின்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கடந்த நவம்பர் 13ம் திகதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பலியான சோக சம்பவம் இன்னும் பாரீஸ் மக்களிடமிருந்து முழுமையாக விலகவில்லை. பிரான்ஸ் நாட்டை பொறுத்தவரை இந்த ஆண்டு தொடங்கியபோது சார்லி ஹெப்டோ பத்திரிகையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இதேபோல் இந்த ஆண்டு நிறைவு பெறும்போதும் பாரீஸ் நகர இசை நிகழ்ச்சியில் தற்கொலை படை தாக்குதலை நடத்தியது பாரீஸ் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாரீஸ் நகரில் உள்ள சில முக்கிய வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூறுகையில், ‘பாரீஸ் நகரில் புத்தாண்டு தினத்திற்கு முன்னதாக கொண்டாங்கள் தொடங்கிவிடும். ஆனால், இந்த புத்தாண்டு தினத்தில் இங்குள்ள பல ஹொட்டல்கள், கேளிக்கை விடுதிகள் உள்ளிட்ட கொண்டாட்ட தளங்கள் மிகவும் கலையிழந்து காணப்படுகிறது. இங்கு வருவர்களின் எண்ணிக்கை தற்போது பாதிக்கும் மேல் குறைந்துள்ளது. அதேபோல், உள்நாட்டு மக்கள் மட்டுமின்றி புத்தாண்டு தினத்தன்று வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

இதன் மூலம், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இருந்த் மக்கள் இன்னும் மீளவில்லை என்பதையே இது காட்டுவதாக தெரிவித்துள்ளனர். புத்தாண்டு குறித்து பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo கூறுகையில், ‘2016ம் ஆண்டு புத்தாண்டு தினத்தை மிகுந்த வேதனையுடன் வரவேற்கும் சூழல் நகர மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று அரசு சார்பில் Champs Elysees என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், இந்த புத்தாண்டு தினத்திற்கு பெருவாரியான சுற்றுலா பயணிகள் வருவது குறைவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி நள்ளிரவு முழுவதும் நடைபெறும். ஆனால், இந்தாண்டு இரவு 8 மணிக்கு முன்னதாக பாதுகாப்பு கருதி நிறைவுபெறும் என்றும், எனினும் பாரீஸ் மக்கள் உற்சாகத்தை இழக்க வேண்டாம் என்றும் பாரீஸ் மேயர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

SHARE