ஜேர்மனியில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க தடை

316
ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி முகாம்களில் தங்கியுள்ள வெளிநாட்டினர்கள் புத்தாண்டு அன்று பட்டாசுகள் மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வெடிபொருட்களை வெடிக்க தடை விதித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் இந்த அதிரடி தடை நடைமுறைப்படுத்த உள்ள நிலையில் ஜேர்மனியின் Rhine-Westphalia மாகாணத்தில் இந்த கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். இந்த தடை குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்ட அந்நாட்டு அரசு, ‘அகதிகள் முகாம்களில் அல்லது முகாம்களுக்கு அருகாமையில் பட்டாசுகளை வெடித்து புத்தாண்டு தினத்தை கொண்டாடும்போது தீவிபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.மேலும், யுத்தங்களில் இருந்து மீண்டு வந்துள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகளின் முகாம்களுக்கு அருகில் பட்டாசுகளை வெடித்தால், அது அவர்களது நாடுகளில் போர்க்களத்தில் வெடிக்கப்பட்ட வெடிகுண்டுகளை நினைவுப்படுத்துவதுடன், அகளுக்கு உளவியல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த கட்டுப்பாடுகளை அகதிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என அந்த அரசு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Arnsberg நகர தீயணைப்பு துறையினர் அந்நாட்டு பொதுமக்களுக்கும் ஒரு பொது அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.அகதிகள் முகாம்களில் பட்டாசுகளை வெடிக்க தடை விதித்திருப்பது போல், இந்நாட்டு குடிமக்களும் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். யுத்தங்களில் பல கொடூரமான தாக்குதல்களை சந்தித்து மனவிரக்தியில் புகலிடம் கோரி வந்துள்ள அகதிகளுக்கு பட்டாசுகளை வெடிக்காமல் தவிற்ப்பதன் மூலம் அவர்களுக்கு நாமும் மரியாதை செலுத்த வேண்டும். இது குறித்து அரசு செய்தி தொடர்பாளரான Christoph Soebbeler என்பவர் கூறுகையில், ‘புத்தாண்டு தினத்தில் பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்பதால், உண்மையான மகிழ்ச்சியும் உற்சாகமும் பறிபோய் விடாது. ஆனால், இதனை நிறைவேற்றுவதன் மூலம் அகதிகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு பட்டாசுகள் வடிவில் அச்சுறுத்தலை தருவதை தவிர்க்கலாம் என கூறியுள்ளார்.

german_crackers_002

SHARE