இலங்கையில் சீனாவின் சாதனையை முறியடிக்க வருகிறது அமெரிக்கா

300
இலங்கையின் தனித்த பெரிய முதலீட்டாளராக விளங்கும் சீனாவின் ஆதிக்கத்தை விரைவில் அமெரிக்கா தகர்த்துவிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 1.4 பில்லியன் டொலர்கள் ஒதுக்கீட்டில் போட் சிட்டி திட்டத்தை ஆரம்பித்துள்ளதன் மூலம் சீனா, இலங்கையின் பாரிய முதலீட்டாளராக பரிணமித்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தென்னிலங்கையில் 2.5 பில்லியன் டொலர்கள் முதலீட்டுடன் அமெரிக்கா,  எரிபொருள் சுத்திகரிப்பு மையங்களை அமைக்கவுள்ளது. இந்த முதலீடுகளை அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ப்ளுர் கோப்பரேசன் உட்பட்ட நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன. ப்ளுர் கோப்பரேசன், உலகளாவிய பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் போச்சுன் சஞ்சிசையின் தரப்படுத்தலில், 2015ம் ஆண்டிலும் தொடர்ச்சியாக நான்காவது தடவையாக முதலிடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் திட்டப்படி நாளொன்றுக்கு 100,000 பீப்பாய் எரிபொருள் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்படவுள்ளது. இந்தநிலையில் நிறுவனத்தின் பணிகள் 2019ம் ஆண்டு நிறைவடையவுள்ளன. இந்த திட்டத்துக்காக அம்பாந்தோட்டை துறைமுக பகுதியில் 500 ஏக்கர் நிலத்தை முழுமையாக வழங்க முடியாத நிலையில் உள்ளதாக இலங்கை முதலீட்டு சபை தெரிவித்துள்ளது. எனவே துறைமுகத்துக்குள்ளும் வெளியிலும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக முதலீட்டு சபை குறிப்பிட்டுள்ளது.

china-america

SHARE