தரையிறங்க முடியாமல் தள்ளாடிய விமானங்கள் – ஒரே சக்கரத்தில் ஓடுதளத்தில் இறங்கிய பயங்கரம்

309
பிரித்தானிய நாட்டில் உள்ள விமான நிலையத்தில் சூறைக்காற்று வீசியதை தொடர்ந்து பல விமானங்கள் ஓடுபாதையில் இறங்க முடியாமல் போராடிய அதிர்ச்சி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.  இங்கிலாந்தில் உள்ள Birmingham என்ற விமான நிலையத்தில் தான் இந்த அதிர்ச்சி காட்சிகள் நிகழ்ந்துள்ளன. சில தினங்களுக்கு முன்னர் வடக்கு இங்கிலாந்தை ஈவா மற்றும் பிராங்க் என பெயரிடப்பட்ட இரண்டு புயல்கள் சூழ்ந்து மழையை வாரி அடித்துச்சென்றுள்ளது. எனினும், இந்த இயற்கை சீற்றங்கள் ஏற்படுவதற்கு முன்னதாகவே Birmingham விமான நிலையத்தில் கடுமையான வேகத்தில் காற்று வீசியுள்ளது.இவ்வாறு சூழ்நிலையில் ஓடுதளத்தில் இறங்க வந்த பல விமானங்கள் பெரும் போராட்டத்தை சந்தித்தன. குறிப்பாக, பிரஸ்சல்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்க முயற்சித்தபோது, காற்று சுமார் 50 கி.மீ வேகத்தில் வீசியதில் விமானம் தரையிறங்க முடியாமல் தள்ளாடியவாறு வந்துள்ளது. ஓடுதளத்தை அடைந்தபோது விமானத்தின் வலதுப்பக்க சக்கரம் மட்டுமே தரை மீது இறங்கியுள்ளது. சில நொடிகள் அந்த விமானம் ஒரு பக்க சக்கரங்களின் உதவியால் ஓடுதளத்தில் சென்றுள்ளது. சிறிய ரக விமானம் ஒன்று இறங்க முயற்சித்தபோது காற்றின் போக்கில் பறந்து ஓடுதளத்தை விட்டு விலகி செல்லும் நிலை ஏற்பட்டும் விமானி கடுமையாக போராடி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.

இதற்கு அடுத்தடுத்து வந்த ஒவ்வொரு விமானிகளும் பெரும் போராட்டத்துடன் விமானங்களை ஓடுபாதையில் இறக்கியுள்ளனர். சில விமானங்கள் தரையிறங்க முடியாமல் மீண்டும் மேல் எழும்பி பறந்த துயர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. புத்தாண்டு தினத்தில் சமூக இணையத்தளமான யூடியூப்பில் வெளியான இந்த அபாயகரமான வீடியோ காட்சிகளை லட்சக்கணக்கான மக்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

SHARE