வீடிழந்த தம்பதிகளிடம் 3000 பவுண்ட் எரிவாயு கட்டணம் வசூலித்த நிறுவனம்

280
பெரு வெள்ள பாதிப்பினால் வீடிழந்த தம்பதிகளிடம் எரிவாயு கட்டணங்களை செலுத்தக் கேட்டு பிரித்தானியா எரிவாயு நிறுவனம் கடிதம் அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் 76 வயதான Patrick Kelly என்பவரது வீடும் பாதிப்புக்குள்ளானது.

இதனால் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதிப்புக்குள்ளான வீட்டை விட்டு Patrick குடும்பத்தினர் வேறு பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான கட்டிடம் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக்கருதிய அதிகாரிகள் அந்த வீட்டின் பெரும்பகுதியை இடித்து தரைமட்டம் ஆக்கியிருந்தனர்.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட கட்டிடத்திற்கு பயன்படுத்தப்பட்ட எரிவாயு கட்டணமாக 3000 பவுண்டு உடனடியாக செலுத்த வலியுறுத்தி பிரித்தானியா எரிவாயு நிறுவனத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.

கடிதம் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள Patrick குடும்பத்தினர், இது தங்களுக்கு அந்த துயர நாட்களை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியா எரிவாயு நிறுவனத்திற்கு உடனடியாக 3000 பவுண்டு செலுத்தும் வகையில் வருவாய் தமக்கு இல்லை என்று கூறும் அவர்,

தாம் இந்த கட்டணத்தை செலுத்தப்போவது இல்லை எனவும், இது இரண்டாவது முறையாக தவறான முகவரிக்கு பிரித்தானியா எரிவாயு நிறுவனம் கடிதம் அனுப்பியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே தவறான முகவரிக்கு கடிதம் அனுப்பியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பிரித்தானியா எரிவாயு நிறுவனம்,

பயனாளர்களின் தகவல்களை கணினியில் பதிவு செய்ததில் ஏற்பட்ட குளறுபடியே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

SHARE