பதான்கோட் விமானப் படை தளம் அருகே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் எஸ்.பி.யின் கார். (உள்படம்) தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட போலீஸ் எஸ்.பி. சல்விந்தர் சிங்

318

 

  •  தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்காக பதான்கோட் விமானப்படை தளத்துக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட கவச வாகனங்கள். படங்கள்: பிடிஐ
    தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்காக பதான்கோட் விமானப்படை தளத்துக்கு லாரியில் கொண்டு செல்லப்பட்ட கவச வாகனங்கள். படங்கள்: பிடிஐ

பதான்கோட் விமானப் படை தளத் தின் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப்படை தீவிரவாதிகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், பகவல்பூர் நகரைச் சேர்ந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியா மீது தாக்குதல் நடத்த கடந்த 6 மாதங்களாக அவர்கள் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர். டிசம்பர் 30, 31-ம் தேதிகளில் அந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ஷாகர்கர் பகுதியில் இருந்து பஞ்சாபின் குர்தாஸ்பூர் அருகில் உள்ள பாமியால் கிராமத்துக்குள் ஊடுருவி உள்ளனர்.

அப்போது பாகிஸ்தானில் இருந்து மர்ம நபர் ஒருவர், தீவிர வாதிகளுக்காக கால் டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். அந்த அழைப்பின்படி கால் டாக்ஸி டிரைவர் இகாகர் என்பவர் இன் னோவா காரில் காட்னா பகுதிக்கு சென்றார்.

அங்கு மறைந்திருந்த தீவிர வாதிகள் துப்பாக்கி முனையில் அவரை காரை ஓட்டச் செய்துள்ள னர். சுமார் 1.5 கி.மீட்டர் தொலைவு காரை ஓட்டிய இகாகர், சாலை யோர பள்ளத்தில் இறங்கி தப்பி யோட முயன்றுள்ளார். அவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டனர். பழுதடைந்த அந்த காரை தீவிரவாதிகள் இயக்கி பிரதான சாலைக்கு வந்துள்ளனர். அப் போது பஞ்சாப் போலீஸ் எஸ்.பி. சல்விந்தர் சிங், அவரது நண்பர் வர்மா, சமையல்காரர் ஆகியோர் ஒரு காரில் வந்துள்ளனர்.

அந்த காரை வழிமறித்த தீவிர வாதிகள், மூவரையும் கடத்திச் சென்றனர். சிறிது தொலைவு சென்ற பிறகு எஸ்.பி.யையும் சமை யல்காரரையும் விடுவித்துவிட்டு வர்மாவை மட்டும் பிணைக்கைதி யாக பிடித்துச் சென்றுள்ளனர்.

போலீஸ் எஸ்.பியின் கார் என்பதால் முகப்பில் புளூ சைரன் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் கட்லா பாலம் சோதனை சாவடியில் போலீஸார் சல்யூட் அடித்து காருக்கு வழிவிட்டுள்ளனர். அங் கிருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள குர்தாஸ்பூர்-பதான்கோட் நெடுஞ்சாலையில் வெள்ளிக் கிழமை இரவு 11.30 மணிக்கு தீவிர வாதிகள் காரில் சென்றுள்ளனர்.

அங்குள்ள சுங்கச் சாவடியி லும் போலீஸ் சைரனை பார்த்து காருக்கு வழிவிடப்பட்டுள்ளது. சனிக்கிழமை அதிகாலை பதான் கோட் விமானப்படை தளம் அருகே 500 மீட்டர் தொலைவில் காரை நிறுத்தியுள்ளனர்.

பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த வர்மாவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளனர். அவர் உயிரிழந்துவிட்டதாக கருதி அங்கிருந்து சென்றுவிட்டனர்.

ஆபத்தான நிலையில் இருந்த அவரை போலீஸார் மீட்டு மருத்து வமனையில் அனுமதித்தனர். அவர் மூலமாகவே இந்தத் தகவல் கள் தெரியவந்துள்ளன. இதனி டையே தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய எஸ்.பி. போலீஸ் கட்டுப் பாட்டு அறைக்கு தகவல் தெரிவித் துள்ளார். போலீஸார் சுதாரிப்பதற் குள் தீவிரவாதிகள் விமானப் படைத் தளத்துக்குள் நுழைந்து விட்டனர்.

பதான்கோட் விமானப் படைத் தளம் சுமார் 2000 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். அந்த வளாகம் முழுவதும் 12 அடி உயர சுற்றுச்சுவர் உள்ளது. அதை தீவிரவாதிகள் தாண்டி குதித்துள்ளனர். விமானப் படை தளத்தின் சமையல் அறை பகுதிக்குள் தீவிரவாதிகள் நுழைந்த பிறகே பாதுகாப்புப் படையினர் அவர்களை கண்டு பிடித்துள்ளனர்.

இந்த தாக்குதலில் பல்வேறு சம்பவங்கள் நெருடலை ஏற் படுத்துவதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் எஸ்.பி.யை தீவிர வாதிகள் விடுவித்தது ஏன், செக் போஸ்டில் இருந்த போலீஸார் காரை தடுத்து நிறுத்தி சோதனை யிடாதது ஏன், போலீஸ் எஸ்.பி. தகவல் தெரிவித்த உடனேயே அந்தப் பகுதியை சீல் செய்யாதது ஏன் என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

SHARE