பேஸ்புக் நிறுவனரை “முட்டாள்” என்று கிண்டல் செய்த வயது முதிர்ந்த பெண்

295
zucherberg
பேஸ்புக் நிறுவனர் தன்னை பற்றி பேஸ்புக்கில் விமர்சித்த வயது முதிர்ந்த பெண்மணிக்கு பதில் அளித்துள்ளார்.

இளைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் பேஸ்புக்கில் அவ்வப்போது சில சுவாரசியமான சம்பவங்கள் இடம்பெறும்.

இம்முறை பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர் பெர்க்கை கிண்டல் செய்து வயது முதிர்ந்து பெண்மணி ஒருவர், ஒரு பதிவினை பதிவேற்றம் செய்துள்ளார்.

அதில், நான் எனது பேத்தியிடம், உன் பள்ளியில் முட்டாளாக உள்ள யாருடனாவது நீ டேட்டிங் செல். நீ டேட்டிங் செல்லும் நபர், சில சமயம் பேஸ்புக் நிறுவனர் மார்க்காக கூட இருக்கலாம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

இதனை பார்த்த மார்க், அதற்கு பதிலளிக்கும் விதமாக, அவ்வாறு அப்பெண் டேட்டிங் சென்றால் அவர் அடுத்த வெற்றிகரமான கண்டுபிடிப்பாளராக மாறுவார் என பதிலடி கொடுத்துள்ளார்.

SHARE