உளவு வேலை பார்த்த பெண் பத்திரிகையாளரை தலை துண்டித்து கொலை செய்த ஐ.எஸ் அமைப்பு

292
சிரியா ஜனாபதிபதி பஷார் அல் அசாத்துக்கு ஆதரவாகவும், ஐ.எஸ் அமைப்புக்கு எதிராக கருத்துக்களையும் பரப்பி வந்த பெண் பத்திரிகையாளரை ஐ.எஸ் அமைப்பு தலை துண்டித்து கொலை செய்துள்ளது.சிரியாவின் ரக்காவில் வசித்து வந்த Ruqia Hassan(30) என்ற பெண் பத்திரிகையாளர் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டதோடு மட்டுமல்லாமல் அவர்களை பற்றி கட்டுரைகள் எழுதுவது, மேலும் சிரியா ஜனபாபதிக்கு ஆதரவாக உளவு வேலையும் பார்த்து வந்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட ஐ.எஸ் அமைப்பு, இவர்களை கடந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கண்காணித்து வந்துள்ளது, இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியானது.

ஆனால், இந்த செய்தி உறுதிசெய்யப்படாத நிலையில், ஐ.எஸ் தீவிரவாதிகள், அந்த பெண் பத்திரிகையாளர் உயிருடன் தான் இருக்கிறார் என்ற பொய்யான தகவலை பரப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில், அவர் சிரியா ஜனபாதிபதிக்கு ஆதரவாக உளவு வேலை பார்த்துள்ளார் என்பதை உறுதி செய்த ஐ.எஸ் அமைப்பு, அந்த பெண் பத்திரிகையாளரை கடந்த செப்டம்பர் மாதம் கொலை செய்துவிட்டோம் என்ற தகவலை தற்போது வெளியிட்டுள்ளது.

SHARE