இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கி பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி

303

 

இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கி பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து:-

இந்தியாவிற்கு மறுக்கப்பட்ட சேவைகளை உள்ளடக்கி பாகிஸ்தானுடன் இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுடன் கைச்சாத்திட உத்தேசிக்கப்பட்டிருந்த சீபா மற்றும் எட்கா ஆகிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட முடியாது என நிராகரிக்கப்பட்ட சேவைகளை, பாகிஸ்தானுடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானுடன் இலங்கை செய்து கொண்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் முதலீடுகள் மற்றும் சேவைகள் பற்றிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திட்டால் சிகை அலங்காரக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்களை ஈடுபடுவோரும் இலங்கைக்குள் படையெடுக்கக் கூடுமென்ற அச்சம் காரணமாக இவ்வாறு நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மீதான இந்தியாவின் பொருளாதார ஆதிக்கமானது வலுவானது எனவும், பாகிஸ்தான் அவ்வாறு வலுவாக ஆதிக்கம் செலுத்தாது எனவும் இதன் காரணமாகவே பாகிஸ்தானுடன் சில விடயங்களில் இந்தியா இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE