உணவு விடுதிகளில் 3000 பவுண்டுகளுக்கு மேல் ஏமாற்றிய போலி மருத்துவர்

294
பிரித்தானியாவில் மருத்துவர் என்று கூறிய நபர் பிரபல உணவு விடுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பவுண்டுகளுக்கு மோசடி நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியாவின் யார்க்‌ஷையர் பகுதியில் குடியிருந்து வரும் 37 வயதான Mark Chapman என்பவர் பிரபல உணவு விடுதிகளில் உணவு அருந்தி விட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்துள்ளார்.

மருத்துவர் என அறிமுகம் செய்து கொண்டு சில விடுதிகளில் இலவசமாக தங்கவும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பல உணவு விடுதிகளில் கைவரிசை காட்டி வந்த போலி ஆசாமி மீது உணவு விடுதி உரிமையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

வழக்கு விசாரணையின் முடிவில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Chapman கடந்த 2008 ஆம் ஆண்டும் இதேப் போன்று உணவு விடுதிகளில் கைவரிசை காட்டிய குற்றத்திற்காக 8 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 9 மாதங்கள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மதுபான விடுதி ஒன்றில் இருந்து விலை உயர்ந்த பொருட்களை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறையில் இருந்துள்ளார்.

தனது வாழ்க்கை முறையை மாற்றாத வரை இதுபோன்ற செயல்களில் இருந்து அவரால் மீண்டு வர முடியாது என வழக்கினை விசாரித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE