மலிவான கட்டணத்தில் புதிய கனேடிய விமான சேவை அறிமுகம்

532
கனடா நாட்டில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் மலிவான கட்டணத்தில் புதிய விமான சேவை ஒன்று தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.மாண்ட்ரீயல் நகரில் விரைவில் தொடங்கவுள்ள NewLeaf Travel என்ற விமான நிறுவனம் நேற்று அதிரடியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி 12ம் திகதி முதல் தொடங்கப்படும் இந்த சேவை மூலம், இதே நிறுவனத்தை சேர்ந்த 15 விமானங்கள் பயணத்தில் ஈடுப்படுத்தப்படும்.

156 இருக்கைகள் கொண்ட அந்த விமானத்தில் பயணம் செய்ய கட்டணமாக 89 டொலர்(வரிகள் உள்பட) மட்டுமே நிர்ணயக்கப்பட்டுள்ளது.

அதாவது, உள்நாட்டில் உள்ள Halifax, Hamilton, Regina, Saskatoon, Abbotsford Kelowna, மற்றும் Winnipeg ஆகிய 7 நகரங்களுக்கு பயணம் செய்ய 89 டொலரில் பயணம் செய்துக்கொள்ளலாம்.

ஆனால், இது பயணச்சீட்டுக்கான கட்டணம் மட்டுமே. இதை தவிர்த்து விரும்பிய இருக்கையை தெரிவு செய்வது, பெட்டிகளை எடுத்து செல்வது, விமானத்தில் மது – உணவுகள் உள்ளிட்ட பிற சேவைகளுக்கு 25 டொலர் முதல் 150 டொலர் வரை வசூலிக்கப்படும்.

இந்த சேவைகளை தவிர்த்தால், 89 டொலரில் 7 நகரங்களுக்கு பயணம் செய்யலாம்.

இந்த நகரங்களை தவிர்த்து தொலை தூர பயணங்களுக்கு 149 டொலர் முதல் கட்டணமாக வசூலிக்கப்படும் என NewLeaf Travel நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE