சிறுமியை கடத்திச் சென்ற பிரித்தானிய இராணுவ வீரர்

286
பிரித்தானியாவின் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பிரான்ஸ் அகதிகள் முகாமில் இருந்து சிறுமியை கடத்திய சம்பவத்தில் குற்றவாளியென நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.பிரித்தானியா முன்னாள் இராணுவ வீரரான 49 வயது Rob Lawrie என்பவர் அகதிகளுக்கு உதவும் பொருட்டு பிரான்சில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி உதவி புரிந்து வந்துள்ளார்.

சம்பவத்தன்று பிரான்சில் இருந்து புறப்பட்ட இவரது வாகனத்தை Calaise பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்புப் படையினர் நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

அப்போது அந்த வாகனத்தில் 4 வயதான ஆப்கான் குழந்தை ஒன்றை மறைத்து வைத்திருந்தது பாதுகாப்புப் ப்டையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

முன்னாள் இராணுவ வீரரான Lawrie குழந்தையை பிரித்தானியாவுக்கு கடத்திவர திட்டமிட்டு செயல்பட்டதாக கூறி அவர் மீது பிரான்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில் குழந்தையை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பிரான்ஸ் அகதிகள் முகாமில் குடியிருப்புகள் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்த இவருக்கு ஆப்கான் அகதிகளான ப்ரூ மற்றும் அவரது தந்தை குறித்து அறிய வந்துள்ளது.

அவர்களின் நிலை குறித்து அறிந்த இவர், அவரது 4 வயதான மகளை அகதிகள் முகாமில் இருந்து மீட்டு பிரித்தானியாவில் இருக்கும் அவர்களது உறவினர்களிடம் சேர்க்க உறுதியளித்துள்ளார்.

வெறும் 4 வயதான அந்த சிறுமிக்கு நல்ல எதிர்காலம் அமைய தாம் உதவியதாகவே தெரிவிக்கும் Lawrie இல்லையென்றால் அந்த குழந்தை அகதிகள் முகாமில் கடும் பனியில் அல்லல் படும் எனவும் குறிப்பிட்டார்.

தமது செயல் முற்றிலும் சட்டத்திற்கு புறம்பானது என தெரிவித்திருக்கும் Lawarie அந்த சிறுமியின் எதிர்காலம் கருதி ஒரு ஆவேசத்தின் பெயரில் அப்படி ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே மனிதாபிமான முறையிலேயே Lawrie செயல்பட்டதாக கூறி அவரது வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பிரான்ஸ் வெளி விவகார அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளனர்.

SHARE