ஆதரவற்ற நபருக்கு மேலாடையை கழற்றி வழங்கிய நபர்

294
அமெரிக்காவில் கடும் குளிரில் அவதியுற்ற இரயில் பயணிக்கு சக பயணி ஒருவர் தனது மேலாடையை கழற்றி வழங்கிய வீடியோ பதிவு வைரலாக பரவியுள்ளது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரயில் பயணத்தின் இடையே நடந்த இந்த சுவாரிய சம்பவத்தை Nolasco என்பவர் கமெராவில் பதிவு செய்து பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

வயது முதிர்ந்த நபர் ஒருவர் மேலாடை ஏதுமின்றி தனியாக அமர்ந்து பயணம் செய்து வந்துள்ளதாகவும், கடும் பனியால் அவரது உடல் களைத்துப்போய் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அந்த முதியவருக்கு உதவும் நோக்கில் ஒரு நபர் எழுந்து வந்து தமது மேலாடையை கழற்றி வழங்கியதாகவும்,

அதை அந்த முதியவர் அணியும் பொருட்டு அவருக்கு உதவி செய்வதும், பின்னர் தமது தொப்பியையும் அவருக்கு வழங்கியுள்ளார் அந்த மனிதர்.

பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ பதிவு இதுவரை 4 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். மேலும் 1 மில்லியன் பேர் இந்த வீடியோ பதிவினை பகிர்ந்தும் உள்ளனர்.

SHARE