தேவாலயத்தில் ஆபாச படப்பிடிப்பா? பாதிரியார் குற்றச்சாட்டு

275
பிரித்தானியாவில் உள்ள தேவாலயம் ஒன்றினை ஆபாச படங்கள் தொடர்பான படப்பிடிப்பு நடத்துவற்கு பயன்படுத்துவதாக அங்கு பணியாற்றும் பாதிரியார் குற்றம் சாட்டியுள்ளார்.பிரித்தானியாவின் Water Orton என்ற கிராமத்தில் உள்ள St Peter and St Paul தேவாலயத்தில் வைத்து, ஆபாசப்படத்திற்கான ஒரு சிறிய காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

அதில், ஆபாச நடிகையான, Lyen Parker என்பவர், தேவாயலத்தின் முன்னால் நின்றுகொண்டு நான் எல்லாவற்றிலும் குறும்பாக இருக்கும் பெண் என கூறிக்கொண்டு ஆபாசமாக போஸ் கொடுக்கிறார்.

இதுதொடர்பான காட்சி அடங்கிய வீடியோவை பார்த்த பாதிரியார் Paul Tullet கூறியதாவது, அந்த காட்சியை பார்த்ததும் நான் மன அமைதியை இழந்துவிட்டேன், இதுபோன்ற படப்பிடிப்புகளுக்கு தேவாலயத்தில் அனுமதி கொடுக்கப்படுவதில்லை.

மேலும், மக்கள் மத்தியில் மிகவும் மதிப்புமிக்க ஒன்றாக இருக்கும் தேவாலயம், அவர்களுக்கு மன நிம்மதியை கொடுக்கும் என்பதால் இங்கு பிரார்த்தனை செய்ய வருவார்கள்.

அதனால், தேவாலயத்தில் இதுபோன்ற சம்பவங்களுக்கு இடம் கிடையாது, மேலும் தேவாலயத்தை 24 மணி நேரமும் கண்காணித்து கொண்டிருக்க முடியாத காரணத்தால், சிலர் இதனை தவறாக பயன்படுத்திக்கொள்கின்றனர் என்று கூறியுள்ளார்.

curch_porn_002

SHARE